Saturday, September 20, 2008

kavithai

உன் வெட்கத்தின்

மையால்

வரையப்படுகிறது

அந்தி!

*

உன் புன்னகைகளை

மதுக் கோப்பையில்

நிரப்பித் தந்தேன்

தள்ளாடியபடி இருக்கிறது

இதயம்!

*

காதல் மீனுக்கு

பொரி

நீ,நான்!!

*

விரலசைத்து

நீ பேசும்போது

காற்று

ஓர் வீணை!

*

உன்னோடு

நான் இருக்கையில்

உலகின் பரப்பளவு

சில சதுர அடிகள்!

*

நீ சிந்தும்

வெட்கத்தை

சேலையென

உடுத்திக் கொள்கின்றன

என் கவிதைகள்!

-திருமுருகன்

1 comment:

யாரோ said...

சரளமா எழுதறீங்க முருகன் ...எண்ணத்தின் தீவிரம் வரிகளில் தெரிகிறது ...தொடர்ந்து எழதுங்கள். வாழ்த்துக்கள்
நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன் ..பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.காம்

-கார்த்தி