Saturday, September 27, 2008

‘மதுமதி’

“உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால்
என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம்,
‘மதுமதி’ என்றேன்.
போதை தரும் நிலவுக்கு
வேறென்ன பெயர் வைக்க முடியும்?

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

காதல்!கவிதை

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*



இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.



*



யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்.



*



உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!



*



தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்

உணர்வுகள்

ஒரு சுவாசத்துக்கும்
மறு சுவாசத்துக்கும்
இடைப்பட்ட
பொழுதிலும்
உனைச் சுவாசிக்க நினைக்கிறது
மனசு.

புதையல் தேடி
அலைவோர் மத்தியில்
புதையலோடு அலைவதாய்ப்
படுகிறது
நீ அருகில் இருக்கையில்.

உணர்வுகள்
மெலியும் போது
வலி
உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது.

இதயம் துடிக்கும்
ஓசை
இடிவிழும் ஓசையாய்
செவிகளை உடைக்கிறது.
என்
மன இருக்கையை நீ
மடித்து வைக்கும் போது.

நீ
பற்றவைக்கும் பார்வைகளை
என் மீது உரசிப் போடாமல்
புறக்கணிக்கும்
போதெல்லாம்
எரிந்து போகிறேன்.

இத்தனையும் சொன்னபின்னும்
நண்பனே
என்றழைக்காதே என்னை.
நான்
நட்புக்குத் துரோகம் செய்துவிட்டேன்

face

padmapriyaglamour